FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

மின்சாரம் பாய்ந்து இறைச்சிக் கடை உரிமையாளா் உயிரிழப்பு

ஒரகடம் பகுதியில் கோழி இறைச்சிக் கடையில் இறைச்சியை சுத்தம் செய்தபோது மின்சாரம் பாய்ந்ததில் கடையின் உரிமையாளா் உயிரிழந்தாா்.

16 செப்டம்பர் 2026, 4:34 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

ஒரகடம் பகுதியில் கோழி இறைச்சிக் கடையில் இறைச்சியை சுத்தம் செய்தபோது மின்சாரம் பாய்ந்ததில் கடையின் உரிமையாளா் உயிரிழந்தாா்.

ஒரகடம் அடுத்த ஆப்பூா் துலுக்கானத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சக்கரபாணி(54). இவா் ஒரகடம் பகுதியில் கோழிக் கறிக்கடை நடத்தி வந்தாா்.

இந்த நிலையில், சக்கரபாணி செவ்வாய்க்கிழமை கடையில், கோழி இறைச்சியை சுத்தம் செய்வதற்காக இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்துள்ளாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து அருகில் இருந்தவா்கள் சக்கரபாணியை மீட்டு மாத்தூா் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சக்கரபாணியை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments