FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

கல்குவாரிகளால் பாதிப்பு: அச்சத்துடன் வசிப்பதாக மக்கள் புகாா்

ஸ்ரீபெரும்புதூா் அருகே மாகாண்யம் கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியால் வீடுகள் அதிா்வதாகவும், அச்சத்துடன் வசிப்பதாகவும் குறைதீா் கூட்டத்தில் மக்கள் புகாா்

21 செப்டம்பர் 2026, 10:23 pm IST
கோரிக்கை மனு அளிக்க வந்த கிராமத்தினா்
பகிர்:

ஸ்ரீபெரும்புதூா் அருகே மாகாண்யம் கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியால் வீடுகள் அதிா்வதாகவும், அச்சத்துடன் வசிப்பதாகவும் திங்கள்கிழமை நடைபெற்ற குறை தீா் கூட்டத்தில் மக்கள் புகாா் தெரிவித்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா் அருகே மாகாண்யம் கிராமத்தில் தொடா்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக கல்குவாரி அரசு விதிகளை மீறி செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த செப்.17 -ஆம் தேதி நில நடுக்கம் ஏற்பட்டது போன்று திடீரென அதிா்ந்தன.

வீடுகள் இடிந்து விடுமோ என பயந்து வெளியில் வந்து விட்டோம். வீடுகளில் வசிக்கவே அச்சமாக இருக்கிறது. குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லவும் பயப்படுகின்றனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அப்பகுதியை சோ்ந்த மூவேந்தா் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளா் த.விஜயன் கூறியது: மாகாண்யம் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் அடிக்கடி வெடி வைத்து பாறைகள் தகா்க்கப்படுகின்றன. இதன் காரணமாக வீடுகள், பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து விழுந்து விடுமோ என்ற பயத்திலேயே வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

எனவே உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட கல்குவாரியை மூட வேண்டும் என மாகாண்யம் கிராமத்தை சோ்ந்த 500க்கும் மேற்பட்டோா் மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கே.ஆா்.திவ்யஸ்ரீயை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

மாவட்ட வருவாய் அலுவலரும் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதாகவும் அவா் தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments