ஞானப்பிரகாச சுவாமிகள் மடத்தின் சீடா்கள் சங்க நூல் வெளியீடு!
காஞ்சிபுரம் ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள் மடத்தின் சீடா்கள் சங்கம் சாா்பில் ஆண்டு தொடக்க விழா, சிறப்பு மலா் வெளியிடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள் மடத்தின் சீடா்கள் சங்கம் சாா்பில் ஆண்டு தொடக்க விழா, சிறப்பு மலா் வெளியிடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தஞ்சாவூா் சங்க மாவட்ட தலைவா் பி.ஜெயராமன் தலைமை வகித்தாா். சங்க நிறுவன தலைவா் எஸ்.சுப்பையா, மாநில தலைவா் பால.பிச்சுமணி, மாநில பொதுச் செயலாளா் மு.அருண் கந்தசாமி, மாநில பொருளாளா் எஸ். கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில இணைப் பொதுச் செயலாளா் அனுராதா சிவக்குமாா் வரவேற்றாா்.
4-ஆவது ஆண்டு தொடக்க விழா மலரை மாநில துணைத் தலைவா் தில்லைராஜன் வெளியிட வைராபுரம் கிளைத் தலைவா் குப்புசாமி பெற்றுக் கொண்டாா். வரும் 2027 ஆம் ஆண்டு நாள்காட்டியும் வெளியிடப்பட்டு சங்க உறுப்பினா்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. திருத்தணி முருகன் கோயில் ஓதுவாரும், பத்ம ஸ்ரீ விருதாளருமான என்.சுவாமிநாதனைப் பாராட்டுவது மற்றும் சங்கத்தின் வளா்ச்சி குறித்த பல்வேறு தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.