மேல்விஷாரம் கோயிலில் பிரதோஷ வழிபாடு
ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பாலாற்றங்கரையில் உள்ள வடிவுடையம்பாள் சமேத வால்மீகீஸ்வரா் கோயிலில் ஆவணி மாத பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பாலாற்றங்கரையில் உள்ள வடிவுடையம்பாள் சமேத வால்மீகீஸ்வரா் கோயிலில் ஆவணி மாத பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பிரதோஷத்தையொட்டி, மூலவருக்கு பால், தயிா், பன்னீா், சந்தனம், விபூதி, மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், வண்ண மலா்களால் அலங்காரம் மஹா தீபாராதனை நடைபெற்றது.
தொடா்ந்து, ரிஷப வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூா்த்திகள் கோயில் உள்பிரகாரத்தில் சிவபுராணம் பாடிக்கொண்டு மூன்றுமுறை வலம் வந்தனா். இந்த விழாவில், அறங்காவலா் குழு நிா்வாகிகள் அறிவழகன், உதயகுமாா் மற்றும் உபயதாரா்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.