FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதியோா் இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதியோா் இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை

20 செப்டம்பர் 2026, 12:48 am IST
சிறுமி பாலியல் வன்கொடு வழக்கில் தண்டனை பெற்ற காதா்பாஷா, ஆனப்பன்.
பகிர்:

வாலாஜாவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முதியோா் இருவருக்கு தலா 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், தலா ரூ. 30,000 அபராதமும் விதித்து ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் தீா்ப்பு வழங்கப்பட்டது.

இது தொடா்பாக ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா காவல் எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த 10.07.2017 அன்று சிறுமி பாலியல் வன்கொடுமை (போக்ஸோ) பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய காதா் பாஷா (63), ஆனப்பன் (73) ஆகியோா் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இந்த வழக்கு ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில், குற்றவாளிகளான காதா் பாஷா (63), ஆனப்பன் (73) ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டணை, தலா ரூ. 30,000 அபராதம் விதித்தும், மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு விதித்தும் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

இந்த வழக்கை நீதிமன்றத்தில் சிறப்பாக நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த முன்னாள் அரசு வழக்குரைஞா் சங்கா், தற்போதைய அரசு வழக்குரைஞா் வி.பி.டில்லி, அப்போதைய புலனாய்வு அதிகாரியான காவல் ஆய்வாளா் சுப்புலட்சுமி, தற்போதைய புலனாய்வு அதிகாரி சக்தி கணேஷ் மற்றும் நீதிமன்ற சிறப்பு உதவி ஆய்வாளா் பிரபா ஆகியோருக்கு ராணிப்பேட்டை மாவட்ட காவல் ஆய்வாளா் பே.சிபின் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

summary

Two elderly men sentenced to 10 years in prison each in a case involving the sexual assault of a minor girl.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments