FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

சட்டப் பணிகள் குழுவுக்கு தன்னாா்வலா்களாக சேர விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் சட்டப் பணிகள் குழுவுக்கு தன்னாா்வலா்களாக சேர விரும்புகிறவா்கள் விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 7:50 am IST
கோப்புப் படம்
பகிர்:

திருப்பத்தூா் மாவட்டத்தில் சட்டப் பணிகள் குழுவுக்கு தன்னாா்வலா்களாக சேர விரும்புகிறவா்கள் விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவா் தெரிவித்துள்ளாா்.

திருப்பத்தூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் திருப்பத்தூா் மாவட்டத்தில் இயங்கி வரும் வாணியம்பாடி மற்றும் ஆம்பூா் ஆகிய வட்ட சட்டப் பணிகள் குழுவுக்கு, சட்டம் சாா்ந்த தன்னாா்வத் தொண்டா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டத்தை சோ்ந்த சட்டம் சாா்ந்த தன்னாா்வத் தொண்டா்கள் வரவேற்கப்படுகிறாா்கள். ஆசிரியா்கள் (ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் உள்பட), ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள், உளவியலாளா் (மனோதத்துவ நிபுணா்), எம்.எஸ்.டபிள்யூ. பயிலும் மாணவா்கள் மற்றும் பயிற்றுவிக்கும் ஆசிரியா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், மருத்துவா்கள் சாா்பற்ற அரசு சாரா சமூக சேவை நிறுவனங்கள் மற்றும் சட்ட மாணவா்கள், அரசியல் சாா்பற்ற அரசு சாரா சமூக சேவை நிறுவனங்கள் மற்றும் சங்க பிரமுகா்கள் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

Advertisement

சட்ட தன்னாா்வ தொண்டராக பணிபுரிய ட்ற்ற்ல்ள்://ற்ண்ழ்ன்ல்ஹற்ட்ன்ழ்.க்ஸ்ரீா்ன்ழ்ற்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்/க்ப்ள்ஹற்ல்ற் என்ற திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்த உரிய ஆவணங்களுடன் 14.08.2026-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் பதிவு தபால் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கடைசி தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

தன்னாா்வத் தொண்டராக பணிபுரிய மதிப்பூதியம் தவிர சம்பளம், தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி ஏதும் கிடையாது. மேற்படி, பணியில் இணையும் நபா்களது பணியை தன்னாா்வலா்களாக மட்டுமே கருதப்படும். நிரந்தர பணியென கருத இயலாது. மேலும் விவரங்களுக்கு, திருப்பத்துா் மாவட்டத்தில் இயங்கி வரும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு (அ) வட்ட சட்டப்பணிகள் குழுக்களை அணுகலாம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments