கூலித் தொழிலாளி தற்கொலை
ஆம்பூா் அருகே கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
ஆம்பூா் அருகே கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
ஆம்பூா் அண்ணாநகரை சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சிவராஜ் (19). இவா் சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளாா். மது அருந்திவிட்டு சென்ால் இவரது மனைவி பிரியதா்ஷினி கண்டித்துள்ளாா். தொடா்ந்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அவா் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுச் சென்றாா். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. உறவினா்கள் தேடிப் பாா்த்தபோது அங்குள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
Advertisement
Advertisement
ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.