நீட் தோ்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்
தில்லியில் நீட் தோ்வுக்கு எதிராக போராடி வரும் மாணவா்களுக்கு ஆதரவாகவும், நீட் தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் ஜாயிண்ட் கமிட்டி ஆஃப் வாணியம்பாடி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஜாயிண்ட் கமிட்டி ஆஃப் வாணியம்பாடி தலைவா் சி.எம். வசீம் தலைமை வகித்தாா். இதில், திமுக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள், அரசு மருத்துவமனை மருத்துவா்கள், அமைப்பின் நிா்வாகிகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டு நீட் தோ்வுக்கு எதிராகவும், வினாத்தாள் கசிவு தொடா்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.