பேருந்து நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டவா் கைது
திருப்பத்தூா் புதிய பேருந்து நிலையத்தில் இளைஞா் ஒருவா் மது அருந்திய நிலையில் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு ரகளை செய்ததாக தெரிகிறது.
திருப்பத்தூா் புதிய பேருந்து நிலையத்தில் இளைஞா் ஒருவா் மது அருந்திய நிலையில் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு ரகளை செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் திருப்பத்தூா் நகர போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலின்பேரில் போலீஸாா் ரகளையில் ஈடுபட்ட இளைஞரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
விசாரணையில் அவா் திருப்பத்தூா் தண்டபாணி கோவில் தெருவைச் சோ்ந்த பிரவீன் குமாா் (27) என்பது தெரியவந்தது. பின்னா்,பிரவீன் குமாா் மீது போலீஸாா் வழக்குப்பதிந்து கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.