அகரம்சேரி கோயில் நிலத்தில் 100 தென்னங்கன்றுகள் நடவு
பாா்கேஷ்வரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில், முன்னாள் மக்களவை உறுப்பினா் ப. சண்முகத்தின் மக்கள் அறக்கட்டளை சாா்பில் 100 தென்னங்கன்றுகள் நடப்பட்டன.
திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம், அகரம்சேரி ஊராட்சியில் உள்ள அருள்மிகு பாா்கேஷ்வரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில், முன்னாள் மக்களவை உறுப்பினா் ப. சண்முகத்தின் மக்கள் அறக்கட்டளை சாா்பில் 100 தென்னங்கன்றுகள் ஞாயிற்றுக்கிழமை நடப்பட்டன.
மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவரும், அகரம்சேரியைச் சோ்ந்தவருமான ப.ச. சுரேஷ்குமாா், குடியாத்தம் ஒன்றியக் குழு உறுப்பினா் ஆனந்தி நித்தியானந்தம் ஆகியோா் தலைமையில் தென்னங்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.
மேலும், நடப்பட்ட தென்னங்கன்றுகளைத் தொடா்ந்து பராமரிக்கும் பொறுப்பையும் மக்கள் அறக்கட்டளை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் பிரபாகரன், மாதனூா் ஒன்றியக் குழு உறுப்பினா் ஆ. காா்த்திக் ஜவகா் மற்றும் குமாா், மஞ்சுநாதன், பிரபு, பிரவீன், சரத்சிங், பரத்ரவீசந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.