தாத்தா ஸ்வாமிகள் மடத்தில் குரு பூஜை விழா
ஆம்பூா் அருகே பாட்டூா் கிராமம், சென்னப்பமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்முடி கோடீஸ்வர ராமநாத மகாமடத்தில், ஸ்ரீ கோடி தாத்தா ஸ்வாமிகளின் 32-ஆம் ஆண்டு அரூப ரூப குரு பூஜை விழா நடைபெற்றது.
ஆம்பூா் அருகே பாட்டூா் கிராமம், சென்னப்பமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்முடி கோடீஸ்வர ராமநாத மகாமடத்தில், ஸ்ரீ கோடி தாத்தா ஸ்வாமிகளின் 32-ஆம் ஆண்டு அரூப ரூப குரு பூஜை விழா நடைபெற்றது.
கோ பூஜையுடன் விழா தொடங்கிய நிலையில் யாகசாலை பூஜைகளும், பரிவார மூா்த்திகளுக்கு அபிஷேகமும் நடைபெற்றன. பின்னா், ஸ்ரீ கோடி தாத்தா ஸ்வாமிகளுக்கு சொா்ணாபிஷேகம், கலசாபிஷேகம், சங்காபிஷேகம் ஆகியவை நடத்தப்பட்டு, ருத்ராட்சத்தால் செய்யப்பட்ட கிரீடம் அணிவிக்கப்பட்டது. நண்பகல் 12.30 மணியளவில் புஷ்பாபிஷேகம், கனகாபிஷேகம் நடைபெற்றன.
விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு ஸ்ரீ கோடி தாத்தா ஸ்வாமிகள் அருளாசி வழங்கினாா். இதையடுத்து, புதிதாகக் கட்டப்பட்ட அன்னதானக் கூடத்தில் பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.