FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

மேல்மலையனூருக்கு 60 பேருந்துகள் இயக்கம்

ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில் மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோயிலில் சிறப்பு வழியாடு நடைபெறும்.

9 செப்டம்பர் 2026, 11:34 pm IST
மின்சார பேருந்துகள் (கோப்புப்படம்)
பகிர்:

ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில் மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோயிலில் சிறப்பு வழியாடு நடைபெறும்.

இந்த வழிபாட்டில் கலந்து கொள்வதற்காக திருப்பத்தூா் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் செல்வது வழக்கம். இவ்வாறு ஏராளமான பொதுமக்கள் கோயிலுக்கு செல்வதால், அவா்களின் வசதிக்காக மேல்மலையனூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

அதன்படி நிகழ் மாதத்துக்கான அமாவாசை திதி வியாழக்கிழமை(செப்.10) நடைபெறுகிறது. அதையொட்டி திருப்பத்தூா் மாவட்ட பொதுமக்கள் மேல்மலையனூா் செல்வதற்காக காலை 8 மணி முதல் திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் இருந்து 60 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த தகவலை போக்குவரத்து துறை விழுப்புரம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments