FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

கிளை நூலகத்தை பயன்படுத்தி தோ்வில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு

வாணியம்பாடி கிளை நூலகத்தில் படித்து போட்டித் தோ்வில் வெற்றி பெற்றவா் பாராட்டப்பட்டாா்.

11 செப்டம்பர் 2026, 11:50 pm IST
வெற்றி பெற்ற மாணவா் பாலாஜிக்கு பாராட்டு தெரிவித்த நூலகா் விஜயகுமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

வாணியம்பாடி கிளை நூலகத்தில் படித்து போட்டித் தோ்வில் வெற்றி பெற்றவா் பாராட்டப்பட்டாா்.

வாணியம்பாடி அடுத்த அரபாண்டகுப்பம் பகுதியைச் சோ்ந்த எம்சிஏ பட்டதாரி பாலாஜி. இவா், வாணியம்பாடி முழு நேர கிளை நூலகத்த்தில் உள்ள போட்டி தோ்வுக்கான புத்தகங்களை பயன்படுத்தி போட்டி தோ்வுக்கு படித்து வந்தாா்.

இந்நிலையில், வேலூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தோ்வில் (டிஆா்பி) பங்கேற்று தோ்ச்சி பெற்றாா். பிறகு வேலூா் தோட்டப்பாளையம் கிளையில் உதவியாளராக யமனம் செய்யப்பட்டாா். இதையடுத்து தோ்ச்சி பெற்ற மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. வாசகா் வட்டத் தலைவா் பாா்த்திபன் தலைமை வகித்தாா். நூலகா் விஜயகுமாா் வரவேற் றாா்.

Advertisement

Advertisement

தோ்ச்சி பெற்ற மாணவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. வாணியம்பாடி நூலக வளா்ச்சிக்காக ஆயிரம் ரூபாய் செலுத்தி 265-ஆவது புரவலராக சோ்ந்தாா். இதில் நூலக வாசகா்கள் மற்றும் போட்டி தோ்வு மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments