FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது: வேளாண் அலுவலா் எச்சரிக்கை

உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என வேளாண் அலுவலா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

18 செப்டம்பர் 2026, 11:42 pm IST
- பிரதிப் படம்
பகிர்:

உரங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என வேளாண் அலுவலா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

திருப்பத்தூா் அருகே குரிசிலாப்பட்டு, இருணாப்பட்டு பகுதிகளில் உள்ள உரக் கடைகளில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) அப்துல் ரஹ்மான் தலைமையிலான அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது உரக்கடை விற்பனையாளா்களிடம், மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு அனுப்புவதோ, பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்யவோ கூடாது, விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டுக்கு மானிய உரங்களை வழங்கக்கூடாது. உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மேல் உரங்களை விற்பனை செய்யக்கூடாது. விலைப் பட்டியல் வைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு தேவையற்ற இடு பொருள்களை இணைத்து விற்பனை செய்யக்கூடாது. தரமற்ற மற்றும் போலியான உரங்களை விற்பனை செய்யக்கூடாது. உர கட்டுப்பாடு சட்ட விதிகளை மீறும் தனியாா், கூட்டுறவு உர விற்பனை நிலையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், உர உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments