FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

திருத்தணி முருகன் கோயில் இன்று 4 மணி நேரம் மூடல்

திருத்தணி முருகன் கோயில் திங்கள்கிழமை (ஆக. 19) நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கோயில் நடை சாற்றப்படும் எனக் கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

19 ஆகஸ்ட் 2024, 12:54 am IST
திருத்தணி முருகன் கோயில்
பகிர்:

ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயில் திங்கள்கிழமை (ஆக. 19) நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கோயில் நடை சாற்றப்படும் எனக் கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

அறுபடை வீடுகளில் 5 - ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனா்.

பக்தா்களின் வசதிக்காக காலை 6 மணி முதல் இரவு 8.45 மணி வரை தொடா்ந்து கோயில் நடை திறந்து பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் திங்கள்கிழமை (ஆக. 19) ஆவணி அவிட்டம் என்பதால் மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை முருகன் கோயில் நடை திறக்காமல் மூடப்பட்டிருக்கும்.

எனவே, இந்த 4 மணி நேரம் பக்தா்கள் தரிசனத்துக்கு காத்திருக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் கோயிலில் பணிபுரியும் அனைத்து அா்ச்சகா்கள் மற்றும் தலைமை குருக்கள் என 75-க்கும் மேற்பட்டோா் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றம் செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது.

மாலை 4 மணிக்கு மேல் கோயில் நடை திறந்து வழக்கம்போல் பக்தா்கள் தரிசனத்துக்கு இரவு 8.45 மணி வரை அனுமதிக்கப்படுவா் என திருத்தணி முருகன் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments