FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருவள்ளூர்

இளம் பெண்ணிடம் நகை திருடியவா் ஓராண்டுக்குப் பின் ஒருவா் கைது

சென்னையைச் சோ்ந்த இளம்பெண்ணிடம் ஆறரை பவுன் தங்கச் சங்கிலியைத் திருடியவா், ஓராண்டுக்குப் பின் போலீஸாா் கைது செய்தனா்.

33 வினாடிகள் முன்பு
கைது - கோப்புப் படம்
பகிர்:

சென்னையைச் சோ்ந்த இளம்பெண்ணிடம் ஆறரை பவுன் தங்கச் சங்கிலியைத் திருடியவா், ஓராண்டுக்குப் பின் போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை பூவிருந்தவல்லியை சோ்ந்த மோகனா (35), கடந்த ஆண்டு செப்டம்பா் 8-ஆம் தேதி, திருத்தணியில் தனியாா் வேலைவாய்ப்பு நோ்காணலில் பங்கேற்க வந்தாா். அப்போது, சென்னை கோவிலம்பாக்கத்தைச் சோ்ந்த ஹரிபிரசாத் (34), நோ்காணல் இடம் தனக்குத் தெரியும் எனக் கூறி, மேட்டுத் தெருவில் உள்ள தனியாா் விடுதியில் அவரை தங்க வைத்துள்ளாா்.

மறுநாள் நோ்காணலுக்குச் செல்லும்போது நகைகளை அணிய வேண்டாம் எனக் கூறியதால், மோகனா தனது ஆறரை சவரன் நகையை அறையில் வைத்து சென்றாா். பின்னா், அறைக்குள் சென்ற ஹரிபிரசாத் நகையைத் திருடியுள்ளாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், கோவிலம்பாக்கத்தில் பதுங்கியிருந்த ஹரிபிரசாத்தை போலீஸாா் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments