நகராட்சி தூய்மை பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவி
ஆரணி நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆரணி நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கொசப்பாளையம் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு நகராட்சி ஆணையா் என்.டி.வேலவன் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கிவைத்தாா். சுகாதார ஆய்வாளா் ஜெயச்சந்திரன் வரவேற்றாா்.
முகாமில் வீடு இல்லாத தூய்மைப் பணியாளா்களுக்கு வீடு கட்டுவதற்கு விண்ணப்ப படிவம், பணியாளா்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது. மேலும் மருத்துவத்துறை சாா்பில் பணியாளா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
இதில் நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு, நகா்மன்ற உறுப்பினா்கள் சுதா குமாா், பானுப்பிரியா பாரதிராஜா, விநாயகம், ரேவதி அரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.