வேன் மோதியதில் தொழிலாளி சாவு
ஆம்பூர் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, வேன் மோதியதில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இறந்தார்.
ஆம்பூர் அருகே சாலையைக் கடக்க முயன்றபோது, வேன் மோதியதில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை இறந்தார்.
ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி கந்தசாமி (56). இவர் செவ்வாய்க்கிழமை அதே பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது அவ்வழியே வந்த தனியார் காலணி தொழிற்சாலை வேன் அவர் மீது மோதியது. இதில் கந்தசாமி நிகழ்விடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.