FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இந்து இயக்கப் பிரமுகர்களை கொலை செய்ய சதித் திட்டம்: 5 பேரை போலீஸ் காவலில்  விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

இந்து இயக்கப் பிரமுகர்களை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக கைதான 5 இளைஞர்களை நான்கு நாள் போலீஸ்

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

இந்து இயக்கப் பிரமுகர்களை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக கைதான 5 இளைஞர்களை நான்கு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோவை நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்துள்ளது.
இந்து இயக்கங்களைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக மத்தியப் புலனாய்வுப் பிரிவு (ஐபி)அதிகாரிகள் கொடுத்த தகவலின்பேரில் கோவை, என்.எச்.சாலையைச் சேர்ந்த ஆர்.ஆஷிக் (25), விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்த எஸ்.இஸ்மாயில் (25), சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த இ.ஜாபர் சாதிக் அலி (29), பல்லாவரத்தைச் சேர்ந்த எஸ்.சம்சுதீன் (20), ஓட்டேரியைச் சேர்ந்த எஸ்.சலாவுதீன் (25) ஆகியோரை வெரைட்டி ஹால் போலீஸார் செப்டம்பர் 2ஆம் தேதி கைது செய்தனர்.
இதையடுத்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்து இயக்கப் பிரமுகர்களைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியது தெரியவந்தது. மேலும், இவர்களுக்கு உதவியதாக கோவையைச் சேர்ந்த ஆட்டோ பைசல் (26), அன்வர் (29) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த 7 பேர் மீதும் சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் (உபா), கூட்டுச் சதி உள்ளிட்ட 7 பிரிகளின் கீழ் வெரைட்டி ஹால் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 
இந்நிலையில், முதலில் கைது செய்யப்பட்ட ஆஷிக் உள்ளிட்ட 5  பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த  போலீஸார் முடிவு செய்தனர். இதையடுத்து, கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 7) மனு தாக்கல் செய்திருந்தனர். 
இந்த மனுவின் மீதான விசாரணை மாவட்ட நீதிபதி சக்திவேல் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கைதான 5 இளைஞர்களையும் நான்கு நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்த நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments