FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

4 நாள் தொடர் ஏற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பு: 23,350 புள்ளிகளுக்குக் கீழ் நிஃப்டி! சென்செக்ஸ் 330 புள்ளிகள் சரிவு!!

சென்செக்ஸ் 329.91 புள்ளிகள் சரிந்து 74,529.08 ஆகவும், நிஃப்டி 85.30 புள்ளிகள் சரிந்து 23,329 ஆக நிலைபெற்றது.

22 செப்டம்பர் 2026, 5:10 pm IST
கோப்புப் படம்
பகிர்:

மும்பை: ஐடி, பொதுத்துறை வங்கி மற்றும் எண்ணெய் & எரிவாயு பங்குகளில் ஏற்பட்ட விற்பனையால், இந்தியப் பங்கு குறியீடுகள் இன்றைய வர்த்தகத்தில், நான்கு நாள் தொடர் ஏற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நஃப்டி 23,350 புள்ளிகளுக்குக் கீழ் சென்று முடிவடைந்தன.

உலகளாவிய சாதகமான சூழ்நிலையால் பங்குச் சந்தை உயர்வுடன் தொடங்கியது, வர்த்தகம் தொடங்கிய சில மணி நேரத்தில் பங்குச் சந்தை வெகுவான அழுத்தத்திற்கு பணிந்தது நிஃப்டி 23,285.75 புள்ளிகளைத் எட்டியது.

வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 329.91 புள்ளிகள் சரிந்து 74,529.08 ஆகவும், நிஃப்டி 85.30 புள்ளிகள் சரிந்து 23,329 ஆக நிலைபெற்றது.

Advertisement

Advertisement

சென்செக்ஸில் பஜாஜ் ஃபின்சர்வ், ட்ரென்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், சன் பார்மா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் உள்ளிட்ட பங்குகள் சரிந்தன மறுபுறம் எடர்னல், இன்டர்குளோப் ஏவியேஷன், டைட்டன் மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் உயர்ந்தன.

நிஃப்டி-யில் டாடா கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், நெஸ்லே, பஜாஜ் ஃபைனான்ஸ், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்தன மறுபுறம் கோல் இந்தியா, இன்டர்குளோப் ஏவியேஷன், எடர்னல், டைட்டன் கம்பெனி மற்றும் டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் ஆகிய பங்குகள் உயர்ந்தன.

நிஃப்டி மிட்கேப் 100 மற்றும் ஸ்மால்கேப் 100 குறியீடுகள் சரிவுடன் முடிவடைந்தன.

துறைவாரியாக, ஊடகக் குறியீடு 1 சதவீதமும், ரியல்டி குறியீடு 0.9 சதவீதமும் உயர்ந்தன. அதே நேரத்தில் ஐடி குறியீடு கிட்டத்தட்ட 1 சதவீதமும், எஃப்.எம். சி.ஜி. பொதுத்துறை வங்கி, மருந்து, எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட குறியீடுகள் தலா 0.5% சரிந்தன.

ஐரோப்பிய சந்தைகள் நேர்மறையான நிலையில் வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் நேற்று கணிசமாக உயர்ந்தன.

தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ. 576.20 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

ஜேஎஸ்டபிள்யூ இன்ஃப்ரா, சிர்மா எஸ்ஜிஎஸ், வெல்ஸ்பன் லிவிங், இன்ஜினியர்ஸ் இந்தியா, ஷியாம் மெட்டாலிக்ஸ், வெல்ஸ்பன் கார்ப், அப்பார் இண்டஸ்ட்ரீஸ், லாரஸ் லேப்ஸ், இப்கா ​​லேப்ஸ், அக்மே சோலார், ஏஜிஸ் வோபாக் மற்றும் ஏஜிஸ் லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட 160க்கும் மேற்பட்ட பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் 52 வார உச்சத்தை எட்டியது.

குஜராத் எனர்ஜி, டாடா எல்எக்சி, வோல்டாஸ், பி&ஜி ஹைஜீன், கேபிஐடி டெக்னாலஜிஸ், யுனைடெட் ப்ரூவரீஸ், விப்ரோ, ஐஆர்பி இன்ஃப்ரா மற்றும் ஆதித்யா பிர்லா லைஃப்ஸ்டைல் ​​பிராண்ட்ஸ் உள்ளிட்ட 100 பங்குகள் 52 வாரக் குறைந்தபட்ச நிலையை எட்டியது.

பிரென்ட் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஐந்தாவது நாளாக சரிந்து, பேரல் ஒன்றுக்கு 100 டாலருக்கும் கீழே குறைந்ததால் ஓரளவுக்கு ஆறுதலாக இருந்த நிலையில், பீப்பாய் ஒன்றுக்கு 1.67 சதவீதம் சரிந்து 98.66 டாலராக உள்ளது.

summary

Indian equity indices ended below 23,350 mark on September 22.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments