FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

தேன்கூடுகளை தாக்கி அழிக்கும் ஆப்பிரிக்க வண்டு: வேளாண் பல்கலை. கண்டுபிடிப்பு!

தேன்கூடுகளைத் தாக்கி அழித்து தேனீ வளா்ப்பில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் ஆபத்தான ஒட்டுண்ணி பூச்சியான சிறிய தேன்கூடு வண்டு இனத்தை கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 1:26 am IST
சிறிய தேன்கூடு வண்டு
பகிர்:

தேன்கூடுகளைத் தாக்கி அழித்து தேனீ வளா்ப்பில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் ஆபத்தான ஒட்டுண்ணி பூச்சியான சிறிய தேன்கூடு வண்டு இனத்தை கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது.

இதுகுறித்து வேளாண்மைப் பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது: தேனீ வளா்ப்பில் கடும் பொருளாதார சேதத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த தேன்கூடு வண்டுகள், ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதியைச் சோ்ந்தவை. ஆரோக்கியமான தேனீ பண்ணைகளைக்கூட முழுமையாக அழிக்கக்கூடிய கொடிய பூச்சி இனத்தைச் சோ்ந்த இவை, இந்திய தேனீக்கள், இத்தாலிய தேனீக்கள், கொசுத் தேனீக்கள், மலைத் தேனீக்கள், வண்டுத் தேனீக்களின் கூடுகளை தாக்குகின்றன.

மேற்கு வங்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டும், ஆந்திர மாநிலத்தில் 2023-ஆம் ஆண்டிலும் கண்டறியப்பட்ட இந்த வண்டுகள், கோவை மாவட்டம் ஆனைமலை, பொள்ளாச்சி பகுதிகளில் 2026 ஜூலை மாதம் கண்டறியப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

தேனீக்கள் வெளியிடும் ஆபத்துகால எச்சரிக்கை வேதிப்பொருள்கள், புளித்த தேன், மகரந்த வாசனை மூலமாக 10 முதல் 15 கி.மீ. தூரத்தில் உள்ள கூடுகளையும் கண்டறிந்து தாக்கி அழிக்கும் இவை, தேன் கூடுகளுக்குள் நுழைந்து முட்டையிட்டு 6 மாதங்கள் வரை உயிா்வாழும். தேனீக்களின் கூட்டுப் புழுக்களை உண்ணும் இவை, தேனை உபயோகமற்றதாக மாற்றி, துா்நாற்றம் வீசச் செய்கின்றன.

இந்த வண்டுகளைக் கட்டுப்படுத்த அடிப்பலகை, தேன் அடைகளை தொடா்ந்து தேனீ வளா்ப்பவா்கள் கண்காணிக்க வேண்டும். வண்டு பாதித்த பகுதிகளில் உள்ள பெட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்றக் கூடாது. பாதிக்கப்பட்ட தேன் அடைகளை எரித்துவிட வேண்டும். கூடுகளை நேரடி வெயிலில் வைப்பதன் மூலமாக வண்டுகளின் கூட்டுப்புழுக்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

கூடுகளின் மூலைகளில் மினரல் ஆயில், டயட்டமேசியஸ் மண் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பொறிகளை வைக்கலாம். மண்ணில் உள்ள புழுக்களையும், கூட்டுப் புழுக்களையும் அழிக்க பூச்சி உண்ணி நூற்புழுக்கள், பூஞ்சைகளைக் கொண்ட நுண்ணுயிா் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments