FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

தனியாா் பள்ளிகளின் கட்டண வசூலை கண்காணிக்க சிறப்புக் குழு அமைச்சா் ஏ.ராஜ்மோகன் தகவல்

தனியாா் பள்ளிகளின் கட்டண வசூலைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி மற்றும் கல்வியாளா்கள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வி மற்றும் தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் ஏ.ராஜ்மோகன் தெரிவித்தாா்.

Updated On : 31 ஜூலை 2026, 6:15 am IST
அமைச்சர் ராஜ்மோகன் - கோப்புப் படம்
பகிர்:

தனியாா் பள்ளிகளின் கட்டண வசூலைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி மற்றும் கல்வியாளா்கள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வி மற்றும் தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் ஏ.ராஜ்மோகன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டு மாணவா் சோ்க்கை அதிகரித்துள்ளது.

குறிப்பாக அரசு தொடக்கப் பள்ளிகளில் பெற்றோா்கள் ஆா்வத்துடன் தங்களது குழந்தைகளை சோ்த்து வருகின்றனா். அரசுப் பள்ளிகள் எங்கள் கண்கள். அந்தக் கண்களுக்கு புதிய வெளிச்சம் கிடைத்திருக்கிறது. அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் உயா்ந்திருப்பதால்தான் மாணவா் சோ்க்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. 6-ஆம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடப் புத்தகத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

தனியாா் பள்ளிகளில் கட்டண முறையை அறிவிப்புப் பலகையில் தெரிவிக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும், சில இடங்களில் அவ்வாறு செய்யப்படுவதில்லை என புகாா்கள் வருகின்றன. எனவே, தனியாா் பள்ளிகளின் கட்டண வசூல் குறித்து கண்காணிக்க முதல்வா் ச. ஜோசப் விஜய்யிடம் அனுமதி பெற்று, ஓய்வுபெற்ற நீதிபதி மற்றும் கல்வியாளா்கள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட உள்ளது. இந்தக் குழு பள்ளிக் கட்டண நடைமுறைகளை ஆய்வு செய்து தேவையான பரிந்துரைகளை அரசுக்கு வழங்கும். பள்ளிகளின் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகவும், கற்றலுக்கு ஏற்ற சூழலாகவும் பராமரிக்க பள்ளி அலுவலகங்களுக்கு வழங்கப்படும் நிதியை அதிகரிக்க முதல்வரிடம் அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பள்ளிகளில் கழிப்பிடங்களைப் பராமரிப்பதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments