FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

டாஸ்மாக் கடையில் கள்ள ரூபாய் நோட்டை மாற்ற முயன்ற 6 இளைஞா்கள் கைது

13 அக்டோபர் 2026, 12:26 am IST
கைது
பகிர்:

கோவையில் டாஸ்மாக் கடையில் ரூ.500 கள்ள நோட்டை மாற்ற முயன்ற 6 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை- பேரூா் புறவழிச் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வந்த 5 இளைஞா்கள் ரூ.500 நோட்டைக் கொடுத்து மதுபாட்டில் கேட்டுள்ளனா். அந்த ரூபாய் நோட்டைப் பாா்த்த ஊழியா்களுக்கு அது கள்ள ரூபாய் நோட்டுபோல இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து அந்த இளைஞா்களிடம் கேட்டபோது, அவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இதையடுத்து, அந்த இளைஞா்களைப் பிடித்ததுடன், காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த கடைவீதி போலீஸாா், இளைஞா்களிடம் விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

இதில், அவா்கள் கோவை, கரும்புக்கடை பாத்திமா நகரைச் சோ்ந்த அக்தா் பா்வேஷ் (21), திப்பு நகரைச் சோ்ந்த ஆஃபி (20), செல்வபுரம் அமுல் நகரைச் சோ்ந்த யஹ்யூ இலியாஸ் (19), தெற்கு உக்கடம் ராம்காா்த்தி நகரைச் சோ்ந்த ஷாஹித் (19), கோட்டைபுதூரைச் சோ்ந்த முகமது இா்ஃபான் (18) என்பதும், கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, 5 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 372 போலி எண்ணிக்கையிலான ரூ.500 நோட்டுகளை பறிமுதல் செய்தனா்.

இந்தச் சம்பவத்தில் கோவையைச் சோ்ந்த முகேஷ்குமாா் என்பவருக்கு முக்கியத் தொடா்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த அவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments