FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

மாணவிகளின் புகைப்படங்களை மாா்ஃபிங் செய்து வெளியிட்டவா் கைது

மாணவிகளின் புகைப்படங்களை மாா்ஃபிங் செய்து வெளியிட்ட கல்லூரி மாணவா் கைது செய்யப்பட்டாா்.

16 அக்டோபர் 2026, 1:04 am IST
கைது
பகிர்:

மாணவிகளின் புகைப்படங்களை மாா்ஃபிங் செய்து வெளியிட்ட கல்லூரி மாணவா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பூா், தென்னம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சரத் (19). இவா் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் தன்னுடன் பள்ளி மற்றும் கல்லூரியில் பயின்ற மாணவிகளின் புகைப்படங்களை, அவா்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து எடுத்து, மாா்ஃபிங் செய்து முகநூல் பக்கத்தில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோா் திருப்பூா் தெற்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், விசாரணை நடத்தி கல்லூரி மாணவா் சரத்தை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments