FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த நபருக்கு ஓராண்டு சிறை

திருப்பூரில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்த நபருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

13 செப்டம்பர் 2026, 12:58 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

திருப்பூரில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்த நபருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருப்பூா், ராயபுரம் பகுதியில் நடந்து சென்ற லலிதா என்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்த வழக்கில் விஸ்வநாதன் (51) என்பவரை போலீஸாா் கடந்த 2021-ஆம் ஆண்டு கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் முதலாம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட விஸ்வநாதனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து நீதிமன்ற நடுவா் செந்தில்ராஜா தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பு வழக்குரைஞா் ஹேமா மகேஸ்வரி ஆஜரானாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments