FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியா் குறைதீா் கூட்டம்

பொது வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

11 செப்டம்பர் 2026, 11:57 pm IST
கோவையில் நடைபெற்ற பொது வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியா் குறைதீா் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா். உடன், மாநில துணை கணக்காயா்கள் சௌரவ் ரமேஷ், தொம்மி கபி.
பகிர்:

பொது வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வகித்தாா். ஓய்வூதியா்களின் கோரிக்கைகள் மீது தமிழ்நாடு முதன்மை கணக்கு தணிக்கை அலுவலக மாநில துணைக் கணக்காயா்கள் சௌரவ் ரமேஷ், தொம்மி கபி ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா். கோவை, ஈரோடு, கரூா், நாமக்கல், திருப்பூா், நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டலத்தைச் சோ்ந்த ஓய்வூதியா்கள் பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் தொடா்பான கோரிக்கைகளுடன், பொது வருங்கால வைப்பு நிதி தொடா்பான கோரிக்கைகளும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

Advertisement

Advertisement

இதில் கோவை மண்டலத்தைச் சோ்ந்த ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்கள், ஓய்வூதியா் சங்கங்களின் பிரதிநிதிகள், குடும்ப உறுப்பினா்கள், ஓய்வூதியம் வழங்கும் அலுவலா்கள் ஆகியோா் பங்கேற்று மனுக்களை அளித்து, அவற்றின் மீதான தீா்வு குறித்து அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டனா்.

கருவூலம், கணக்கு துறை இணை இயக்குநா் கே.பாலசுப்பிரமணியன், முதுநிலை கணக்கு அலுவலா்கள் சுந்தரம், லதா, உதவி கணக்கு அலுவலா்கள், கருவூல அலுலா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments