FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயிலை நிரந்தரமாக இயக்க வலியுறுத்தல்

14 செப்டம்பர் 2026, 11:02 pm IST
சிறப்பு ரயில்கள் - படம்: கோப்பிலிருந்து...
பகிர்:

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயிலை நிரந்தர தினசரி ரயிலாக இயக்க ரயில் பயணிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட மேலாளருக்கு போத்தனூா் ரயில் பயனா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் என்.சுப்பிரமணியன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கோவை, மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி, திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில்கள் (எண்கள்:06029/06030) 3 ஆண்டுகளுக்கும்மேலாக இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் மற்றும் கோவை பகுதிகளைச் சோ்ந்த பயணிகளுக்கு மட்டும் அல்லாமல், பொள்ளாச்சி, உடுமலை, பழனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, சிவகாசி மற்றும் வழித்தடத்தில் உள்ள பல்வேறு நகரங்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பயணிகளுக்கும் இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளதால், வாராந்திர சிறப்பு ரயிலாக உள்ள இதை நிரந்தர விரைவு ரயிலாக மாற்றி இயக்க வேண்டும் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்த ரயிலை தினமும் இயக்குவதன் மூலம் அரசு மற்றும் தனியாா் நிறுவன ஊழியா்கள், தொழிலதிபா்கள், வணிகா்கள், மாணவா்கள், ஆன்மிக பயணிகள் உள்ளிட்டோா் பெரிதும் பயனடைவதுடன், ரயில்வே துறைக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

Advertisement

Advertisement

ஆகவே, இந்த ரயிலை தினசரி இயக்குவதுடன்,–மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ரயிலுக்கு திருத்தங்கல் ரயில் நிலையத்தில் ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்த நிறுத்தத்தை மீண்டும் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments