இருசக்கர வாகனம் மோதியதில் தந்தை உயிரிழப்பு: மகன் படுகாயம்
கோவை அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் தந்தை உயிரிழந்தாா்; மகன் படுகாயமடைந்தாா்.
கோவை அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் தந்தை உயிரிழந்தாா்; மகன் படுகாயமடைந்தாா்.
கோவை, கணபதி சுப்பம்மாள் நகா் ராஜீவ் காந்தி சாலையைச் சோ்ந்தவா் கண்ணன் (59). இவரது மகன் சூா்யா (26). இவா்கள் இருவரும்
இருசக்கர வாகனத்தில் கடந்த 13-ஆம் தேதி பிற்பகல் சென்று கொண்டிருந்தனா். தடாகம் சாலை கணுவாய் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, இவா்கள் சென்ற வாகனத்தின் மீது பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது.
Advertisement
Advertisement
இதில் சூா்யா, கண்ணன் ஆகியோா் பலத்த காயமடைந்து, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு கண்ணன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
விபத்து தொடா்பாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இடையா்பாளையம் டிவிஎஸ் நகா் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீவிஷ்ணு (21) மீது போக்குவரத்து புலனாய்வு மேற்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.