FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.84 லட்சம் பறிமுதல்

தாராபுரம் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.84 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

34 வினாடிகள் முன்பு
பணம் - பிரதிப் படம்
பகிர்:

தாராபுரம் அருகே உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.84 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு, வாக்காளா்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் உள்ளிட்டவை விநியோகிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் தோ்தல் பறக்கும் படையினா் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு, வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், சந்திராபுரம் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஈடுபட்டிருந்தனா். அப்போது, கேரள மாநிலத்தில் இருந்து தளவாய்பட்டிணம் நோக்கி வந்த காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அதில் ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்து 500 ரொக்கம் இருந்தது தெரியவந்தது. ஆனால், உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பணத்தைப் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments