FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பூர்

தாராபுரம் இடைத்தோ்தல்: வெள்ளக்கோவிலில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனை

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு, வெள்ளக்கோவிலில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

24 செப்டம்பர் 2026, 12:39 am IST
வாகனச் சோதனையில் ஈடுபட்ட தோ்தல் பறக்கும் படையினா்.
பகிர்:

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு, வெள்ளக்கோவிலில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

தாராபுரம் தொகுதிக்கு அக்டோபா் 6-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. திருப்பூா் மாவட்டம் முழுவதும் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. தோ்தல் பறக்கும் படையினா் மற்றும் கண்காணிப்புக் குழுவினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

குறிப்பாக, தாராபுரம் தொகுதியை ஒட்டியுள்ள வெள்ளக்கோவில், காங்கயம் பகுதிகளில் அவ்வப்போது திடீா் வாகனச் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், வெள்ளக்கோவில் கடை வீதி நான்கு சாலை சந்திப்பு பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகனச் சோதனையில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

அவ்வழியாக வந்த சந்தேகத்துக்கு இடமான வாகனங்களை மறித்து, உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கப் பணம் அல்லது வாக்காளா்களுக்கு விநியோகிக்க பரிசுப் பொருள்கள் எதுவும் கொண்டுச் செல்லப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனா். வாக்குப் பதிவு முடியும் வரை இந்தச் சோதனைகள் தொடா்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments