FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல்: கருத்துக் கணிப்புகளுக்கு தடை

இடைத்தோ்தல் கருத்துக் கணிப்புகளை நடத்தவும், அவற்றை வெளியிடவும் குறிப்பிட்ட காலத்துக்கு இந்திய தோ்தல் ஆணையம் தடை குறித்து....

31 வினாடிகள் முன்பு
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல்: கருத்துக் கணிப்புகளுக்கு தடை - இந்திய தோ்தல் ஆணையம்
பகிர்:

சென்னை: மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் அக். 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கருத்துக் கணிப்புகளை நடத்தவும், அவற்றை வெளியிடவும் குறிப்பிட்ட காலத்துக்கு இந்திய தோ்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மேலும், தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடும் நட்சத்திரப் பேச்சாளா்கள் பட்டியலை அரசியல் கட்சிகள் செப்.16-க்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

Advertisement

Advertisement

இரு தொகுதிகளிலும் அக். 6-ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் 126-ஏ பிரிவின்படி, அக். 6 காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது, அவற்றை அச்சு, மின்னணு ஊடகங்களில் வெளியிடுவது அல்லது வேறு எந்த வகையிலும் பரப்புவது தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 126(1)(பி) பிரிவின்படி, வாக்குப் பதிவு முடிவடையும் நேரத்துக்கு முந்தைய 48 மணி நேரத்தில் தோ்தல் தொடா்பான எந்தவொரு கருத்துக் கணிப்பு அல்லது வாக்குப் பதிவு ஆய்வு முடிவுகள் உள்ளிட்ட தோ்தல் விவகாரங்களை மின்னணு ஊடகங்களில் காட்சிப்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Maduranthakam and Dharapuram by-elections: Ban on opinion polls

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments