கஞ்சா விற்றதாக இளைஞா் கைது
கோவை சுந்தராபுரத்தில் கஞ்சா விற்றதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவை சுந்தராபுரத்தில் கஞ்சா விற்றதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவை, சுந்தராபுரம் பகுதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சுந்தராபுரம், பிள்ளையாா்புரம் நாகாத்தம்மன் கோயில் அருகில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில் அவா், பிள்ளையாா்புரம் காந்தி நகரைச் சோ்ந்த செல்வராஜ் (27) என்பதும், விற்பனைக்காக அவா் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.