FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கிராம தங்கல் திட்டத்தின்கீழ் வேளாண் பல்கலை. மாணவிகளுக்குப் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் கோபி பகுதியில் கிராம தங்கல் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்றனர்.

30 ஜனவரி 2024, 10:15 pm IST
பகிர்:

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகள் கோபி பகுதியில் கிராம தங்கல் திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்றனர்.
 பவானி, பெரியபுலியூர், ஓடத்துறை, ஜம்பை, ஆப்பக்கூடல், சலங்கபாளையம், கவுந்தப்பாடி ஆகிய கிராமங்களில் விவசாயிகளைச் சந்தித்து விவசாய முறைகள், கால்நடை வளர்ப்பு, பயிர் சாகுபடி, புதிய தொழில்நுட்பங்கள், விவசாயிகளின் கிராமப்புற நிலை குறித்து அறிய 11 மாணவிகள் கொண்ட குழு 90 நாள்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெற வந்துள்ளனர்.
 கவுந்தப்பாடி, தடப்பள்ளி பாசனப் பகுதிகளில் தற்போது கரும்பு அறுவடை செய்து நாட்டு சர்க்கரை தயாரிக்கும் பணிகள் பொன்னாச்சிபுதூர், ஆண்டிபாளையம், பெருந்தலையூர், அய்யம்பாளையம், பாப்பாங்காட்டூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.    வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் வயலுக்குச் சென்று கரும்பு சாகுபடி, நீர் நிர்வாகம், கரும்பு அரவை குறித்த விவரங்களை அறிந்து கொண்டனர். நாட்டுச் சர்க்கரை தயாரிப்பு, மருத்துவ குணங்கள் பற்றி உழவர் விவாதக் குழு அமைப்பாளர் பா.மா.வெங்கடாசலபதி விளக்கிக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments