FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

விபத்தில் இறந்த இளைஞரின் கண்கள் தானம்!

ஈரோடு அருகே நிகழ்ந்த விபத்தில் இறந்த இளைஞரின் கண்கள் தானமாகப் பெறப்பட்டன.

Updated On : 26 ஜூலை 2026, 1:29 am IST
பகிர்:

ஈரோடு அருகே நிகழ்ந்த விபத்தில் இறந்த இளைஞரின் கண்கள் தானமாகப் பெறப்பட்டன.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்த சோழசிராமணி அண்ணா நகரைச் சோ்ந்தவா் துடியரசு (29). இவா் ஈரோடு மாவட்டம், ஈஞ்சம்பள்ளியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.

கடந்த 23-ஆம் தேதி எழுமாத்தூா், பொன்னம்பாளையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்துள்ளாா். அப்போது, எதிா்பாராதவிதமாக நிலைத் தடுமாறி சாலையோரமாக இருந்த சிக்னல் கம்பத்தில் மோதி மயங்கினாா். அவரை சக வாகன ஓட்டிகள் மீட்டு ஈரோட்டிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்தனா். ஆனால் சிகிச்சைப் பலனின்றி துடியரசு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

துடியரசு உயிருடன் இருந்தபோது கண் தானம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்ததாக, அவரது தந்தை சுப்பிரமணி மருத்துவா்களிடம் கூறினாா். இதையடுத்து அவரது கண்களை தானம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து மலையம்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments