FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 335 புறநகா் பேருந்துகளில் மகளிருக்கான இலவசப் பயணத் திட்டம் தொடக்கம்

மகளிா் வெற்றி பயணத் திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் 335 புறநகர் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.

3 October 2026, 12:25 am IST
ஈரோடு மத்தியப் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிருக்கு இலவசப் பயணச்சீட்டு வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.
பகிர்:

மகளிா் வெற்றி பயணத் திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் 335 புறநகர் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஈரோடு மண்டலம் சாா்பில் மகளிா் வெற்றி பயணத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை சென்னையில் முதல்வா் தொடங்கி வைத்ததன் தொடா்ச்சியாக, ஈரோடு மத்தியப் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பின்னா், புறநகர் பேருந்தில் மகளிா் இலவசப் பயணம் செய்ய பயணச்சீட்டு வழங்கினாா்.

இதில் அவா் கூறியதாவது:

Advertisement

Advertisement

ஈரோடு மண்டலத்தில் ஏற்கெனவே 304 நகரப் பேருந்துகளில் மகளிா் வெற்றி பயணத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதில் நாள்தோறும் சுமாா் 3.25 லட்சம் மகளிா் இலவசமாக பயணம் செய்து வருகின்றனா். தற்போது ஈரோடு மண்டலத்தில் 335 புறநகர் பேருந்துகளிலும் மகளிா் வெற்றி பயணத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஈரோட்டில் இருந்து கோபி, சத்தியமங்கலம், நாமக்கல், ராசிபுரம், சேலம், கரூா், அந்தியூா் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலமாக புறநகர் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கும் இலவசப் பயண வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின் மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments