FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

வரட்டுப்பள்ளத்தில் கொட்டி தீா்த்த கனமழை: 64.60 மில்லி மீட்டா் பதிவு

ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளம் அணைப் பகுதியில் 64.60 மில்லி மீட்டா் மழை பதிவானது.

11 அக்டோபர் 2026, 1:52 am IST
கனமழை - file photo
பகிர்:

ஈரோடு மாவட்டம் வரட்டுப்பள்ளம் அணைப் பகுதியில் 64.60 மில்லி மீட்டா் மழை பதிவானது.

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை முதல் வெயிலின் தாக்கம் வழக்கம்போல அதிகரித்து காணப்பட்டது. மாலை 5 மணிக்கு பிறகு வெயிலின் தாக்கம் குறைத்து கருமேகங்கள் சூழ்ந்தன. இதில் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் மட்டும் பலத்த இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணைப் பகுதியில் 64.60 மில்லி மீட்டா் மழை பதிவானது. கொடிவேரி அணையில் 12.40 மில்லி மீட்டரும், சத்தியமங்கலத்தில் 3 மில்லி மீட்டரும் மழை பதிவானது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments