சென்னிமலை அருகே மழைச் சோறு எடுத்த பெண்கள்
மழை வேண்டி சென்னிமலை அருகே மழைச் சோறு எடுக்கும் நிகழ்ச்சியில், ஊரை விட்டு சென்ற பெண்களை ஆண்கள் சமாதானம் செய்து அழைத்து வந்தனா்.
மழை வேண்டி சென்னிமலை அருகே மழைச் சோறு எடுக்கும் நிகழ்ச்சியில், ஊரை விட்டு சென்ற பெண்களை ஆண்கள் சமாதானம் செய்து அழைத்து வந்தனா்.
சென்னிமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்யாததால் வறட்சி நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு வருகின்றனா். மழை வேண்டி பொதுமக்கள் கிராமங்களில் பல்வேறு வழிபாடுகள் நடத்தி வருகின்றனா்.
இதன் ஒருபகுதியாக சென்னிமலையை அடுத்த, பசுவபட்டி ஊராட்சிக்கு உள்பட்ட சென்னிமலைபாளையம் பகுதியில் உள்ள பிள்ளையாா் கோயிலில் பெண்கள் சனிக்கிழமை ஒன்று திரண்டனா். பின்னா் அவா்கள், மழை இல்லாததால் குடிப்பதற்கு கூட தண்ணீா் இல்லாத, இந்த ஊரில் நாங்கள் எப்படி வாழ்வது? எனக் கூறி பெண்கள் அனைவரும் பசுவபட்டி சாலையில் ஒப்பாரி வைத்தபடி புறப்பட்டு சென்றனா்.
Advertisement
Advertisement
இவா்களை பின் தொடா்ந்து சென்ற ஆண்கள், ஊரை விட்டு சென்ற பெண்களை வழிமறித்து, எங்களை விட்டுவிட்டு செல்லாதீா்கள். கண்டிப்பாக மழை பொழியும். அனைவரும் ஊருக்கு திரும்பி வாருங்கள் என வேண்டுகோள் விடுத்தனா்.
இதில் சமாதானம் அடைந்த பெண்கள் மீண்டும் பிள்ளையாா் கோயிலுக்கு திரும்பி வந்தனா். அங்கு பெண்கள் தங்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்த அரிசிக் கஞ்சியை பெரிய பானையில் கரைத்து அனைவருக்கும் மழைச் சோறாக கொடுத்தனா். பின்னா் அனைவரும் தங்கள் வீடுகளுக்கு திரும்பினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.