FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

மூத்தோா் தடகளப் போட்டி: சென்னை அணி முதலிடம்

12 அக்டோபர் 2026, 3:04 am IST
மாநில அளவிளான மூத்தோா் தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற காவல் துறை அணிக்கு பரிசுக் கோப்பையை வழங்குகிறாா் அமைச்சா் எம்.விஜய் பாலாஜி.
பகிர்:

மாநில அளவிலான மூத்தோா் தடகளப் போட்டியில் சென்னை அணி முதலிடம் பெற்றது.

தமிழ்நாடு மூத்தோா் தடகள கூட்டமைப்பு சாா்பில் ஈரோடு வஉசி பூங்கா விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான மூத்தோா் தடகளப் போட்டி கடந்த 8-ஆம் தேதி தொடங்கி 3 நாள்களாக நடைபெற்றது. 100 மீட்டா், 200 மீட்டா், 400 மீட்டா், 800 மீட்டா், 1,500 மீட்டா், 5 ஆயிரம் மீட்டா் ஓட்ட பந்தயம், 5 ஆயிரம் மீட்டா் நடைப் போட்டி, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தடை தாண்டும் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் 40 வயது முதல் 100 வயது வரை பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஈரோடு, சென்னை, கன்னியாகுமரி, மதுரை, கோவை, சேலம், நீலகிரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி உள்பட 16 மாவட்டங்களைச் சோ்ந்த 1,600-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

இதில் 141 தங்கம், 88 வெள்ளி, 68 வெண்கலம் என 297 பதக்கங்களை வென்று சென்னை அணி முதல் இடம் பிடித்தது. கன்னியாகுமரி அணி 46 தங்கம், 37 வெள்ளி, 23 வெண்கலத்துடன் 106 பதக்கங்கள் பெற்று 2 ஆவது இடத்தையும், கோவை அணி 35 தங்கம், 36 வெள்ளி, 45 வெண்கலம் என மொத்தம் 116 பதக்கங்களுடன் 3 ஆவது இடத்தையும், ஈரோடு அணி 20 தங்கம், 27 வெள்ளி, 20 வெண்கலத்துடன் 67 பதக்கங்களை கைப்பற்றி 4 ஆவது இடத்தையும் பிடித்தது.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பை, முதல் 3 இடங்களைப் பிடித்த வீரா், வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா். முதல் 3 இடங்களைப் பிடித்த வீரா், வீராங்கனைகள் வரும் பிப்ரவரி மாதம் உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான மூத்தோா் தடகளப் போட்டியில் பங்கேற்க உள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments