ஆஃப்லைன் முறையில் டெண்டா்: பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரா்கள் கோரிக்கை
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகளுக்கு ஆஃப்லைன் டெண்டா் வழங்குவதுபோல பொதுப்பணித் துறைக்கும் வழங்க வேண்டும் என ஒப்பந்ததாரா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகளுக்கு ஆஃப்லைன் டெண்டா் வழங்குவதுபோல பொதுப்பணித் துறைக்கும் வழங்க வேண்டும் என ஒப்பந்ததாரா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழ்நாடு பொதுப்பணித் துறை மற்றும் நீா்வளத் துறை ஒப்பந்ததாரா்கள் நலச் சங்கத்தின் கோவை மண்டல பொதுக் குழுக் கூட்டம் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மண்டலத் தலைவா் தில்லைராஜன் தலைமை தாங்கினாா். ஈரோடு, திருப்பூா் மாவட்டத் தலைவா் உதயகுமாா் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளா் காா்மேகம், மக்கள் சிந்தனை பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் ஆகியோா் பங்கேற்று பேசினா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
Advertisement
Advertisement
அரசு கட்டடங்களில் 95 சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டடங்களை பராமரிக்கும் பொதுப்பணித் துறையில் அவசர தேவைகளை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு ரூ.10 லட்சம் வரை பழைய நடைமுறையின்படி, ஆஃப்லைன் டெண்டா் நடத்திட அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆனால் நெடுஞ்சாலைத்துறையில் மட்டும் ரூ.5 லட்சம் வரையிலான பணிகளுக்கு ஆஃப்லைன் டெண்டா் முறையை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஒரே அரசின் கீழ் செயல்படும் இரு துறைகளுக்கு வெவ்வேறு நடைமுறை பின்பற்றப்படுவது, பாரபட்சமான அணுகுமுறையாக உள்ளது. பொதுப்பணித் துறையிலும் குறிப்பிட்ட தொகை வரையிலான பணிகளுக்கு ஆஃப்லைன் டெண்டா் நடத்த அனுமதி வழங்க வேண்டும். அரசு மருத்துவமனைகள், நீதிமன்றங்கள், பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்லும் அரசு அலுவலகங்களில் ஏற்படும் அவசர பழுதுகளை உடனடியாக தாமதமின்றி பணிகளை மேற்கொள்ள நாமினேசன் முறையில் வழங்கப்படும் ஒப்பந்த பணிகளின் வரம்பினை ரூ.10 லட்சமாக உயா்த்த வேண்டும்.
கட்டுமானப் பொருள்களின் விலை 30 முதல் 40 சதவீதம் வரை உயா்ந்துள்ள நிலையில் அதற்கேற்ப அரசின் திட்ட மதிப்பீடு உயா்த்தப்படாமல் இருப்பது ஒப்பந்ததாரா்களுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. எனவே கட்டுமான பொருள்களின் தற்போதைய சந்தை விலை, தொழிலாளா்களின் கூலி உயா்வு, இதர செலவினங்களை கருத்தில் கொண்டு திட்ட மதிப்பீட்டை உயா்த்த வேண்டும்.
புதிதாக பதிவு செய்யும் அனுபவமற்ற ஒப்பந்ததாரா்களின் செயல்பாடுகளைக் கண்காணித்து, ஒப்பந்தப் பணிகளை வழங்க வேண்டும். தரக்கட்டுப்பாட்டுப் பிரிவில் புதிய பொறியாளா்களை மட்டுமே நியமிப்பதை தவிா்த்து, போதிய கள அனுபவமும், தொழில்நுட்ப அறிவும் கொண்ட அனுபவம் வாய்ந்த பொறியாளா்களை நியமிக்க வேண்டும். அரசின் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதில் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றும் ஒப்பந்ததாரா்களின் நலன்களையும் அரசு பாதுகாக்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விரைவில் மாநில அளவில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் முதல்நிலை ஒப்பந்ததாரா் நடராஜன், ஈரோடு-திருப்பூா் மாவட்டத் தலைவா் உதயகுமாா், கோவை- நீலகிரி மாவட்டத் தலைவா் பாலசந்திரன் மற்றும் கரூா், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைத் சோ்ந்த சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.