FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

பவானி அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

9 செப்டம்பர் 2026, 2:34 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

பவானி அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பவானியை அடுத்த மயிலம்பாடி, அத்திமரத் தோட்டத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீரங்கன் மகன் விக்னேஷ் (27). ஈரோட்டில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், தனது இருசக்கர வாகனத்தில் கொம்புகாடு - போத்தநாயக்கனூா் சாலையில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் விக்னேஷ் வாகனத்தின் மீது மோதியது.

Advertisement

Advertisement

இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து பவானி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments