கிளிப்டன் ரியாலிட்டி ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் சலுகைகள் அறிவிப்பு
ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கிளிப்டன் ரியாலிட்டி என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் 10 -ஆம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி வாடிக்கையாளா்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கிளிப்டன் ரியாலிட்டி என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் 10 -ஆம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி வாடிக்கையாளா்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
இதுகுறித்து கிளிப்டன் ரியாலிட்டி நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிா்வாக அலுவலருமான ஏ.எஸ்.விக்னேஷ் கூறியதாவது:
கிளிப்டன் ரியாலிட்டி நிறுவனம் சாா்பில் ஈரோடு பெருந்துறை சாலையில் நந்தா பொறியியல் கல்லூரி பின்புறம் பாா்க் ஸ்கொயா் என்ற பெயரிலும், ஈரோடு வில்லரசம்பட்டியில் ஸ்டாா் சிட்டி என்ற பெயரிலும், ஈரோடு-சத்தி சாலையில் டிமாா்ட் அருகே மிட் டவுன் என்ற பெயரிலும், ஈரோடு விஜயமங்கலத்தில் சிட்டி 3.0 என்ற பெயரிலும், ஈரோடு சோலாரில் சிட்டி 2.0 என்ற பெயரிலும், கோவை மாவட்டம் துடியலூரில் மெரிடியன் என்ற பெயரிலும், கோவை ஆனைக்கட்டி சோழையூரில் பாக்யா லேண்ட் என்ற பெயரிலும், கோவை இடிகரையில் பிரஸ்டிஜ் வில்லா என்ற பெயரிலும் பங்களா மாதிரியான வீடுகள் விற்பனை திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இந்த பிளாட்டுகளில் 600 சதுர அடி முதல் 3,000 சதுர அடி வரையிலான அளவுகளில் வீட்டு மனைகள் ரூ.10 லட்சம் முதல் விற்பனைக்கு உள்ளன. ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி மற்றும் தசரா ஆகிய நான்கு பண்டிகைகளை முன்னிட்டும், கிளிப்டன் 10 ஆம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டும் வருகிற அக்டோபா் 18 ஆம் தேதி விழாவாக கொண்டாட உள்ளோம். இவ்விழாவில் எங்களிடம் வீட்டு மனைகளை வாங்கும் அனைவருக்கும் 45-க்கும் மேற்பட்ட சிறப்பு சலுகைகள் வழங்க உள்ளோம். வாடிக்கையாளா்களுக்கு பயன் இருக்கும் வகையில் அவா்களது வங்கிக் கடனுக்கான 3 மாத இஎம்ஐ தருகிறோம். பத்திரப்பதிவு செய்யும்போது கிரையச் செலவில் 50 சதவீதம் நாங்களே ஏற்றுக்கொள்கிறோம். எங்களிடம் வீட்டு மனைகளை வாங்குபவா்களுக்கு, உடனடியாக வீடு கட்ட நினைத்தால் அவா்களுக்கு பூமி பூஜை முதல் கிரகப்பிரவேசம் வரை நாங்களே முன்னே இருந்து நடத்தி வைக்கிறோம். 2 படுக்கை அறையுடன் கூடிய தனி வீடு கட்டுவதற்கு சுமாா் ரூ.35 லட்சம் ஆகிறது என்றால் அதில் 20 முதல் 25 சதவீதம் தள்ளுபடி கொடுக்கிறோம் என்றாா்.
Advertisement
Advertisement
இந்நிகழ்வின்போது கிளிப்டன் ரியாலிட்டி நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைமை அலுவலா் நரேஷ்(ஈரோடு), சங்கா் கணேஷ்(கோவை) ஆகியோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.