FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சென்செக்ஸ் 172 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 24,250 க்குக் கீழே நிறைவு!!

சென்செக்ஸ் 171.72 புள்ளிகள் சரிந்து 77,369.11 புள்ளிகளாகவும், நிஃப்டி 32.95 புள்ளிகள் சரிந்து 24,219.05 புள்ளிகளாக நிலைபெற்றது.

24 ஆகஸ்ட் 2026, 5:56 pm IST
கோப்புப் படம்
பகிர்:

மும்பை: இன்றைய வர்த்தகம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வர்த்தகமாக அமைந்த நிலையில், முக்கிய பங்குச் சந்தைக் குறியீடுகள், வாரத்தின் தொடக்கத்தில் சரிவுடன் தொடங்கியது. உலோகம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளைத் தவிர மற்ற துறை பங்குகளில் விற்பனை அழுத்தம் சந்தித்ததால், நிஃப்டி 24,150 க்கும் கீழே சென்று நிறைவடைந்தன.

கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ஈரான் மீதான புதிய தடைகள் குறித்த நிச்சயமற்ற நிலமையால், முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டனர். இதனால், ஆரம்பக்கட்ட வர்த்தகம், உச்சத்தை தக்கவைக்க முடியாமல் மதிய நேர வர்த்தகத்தில் குறியீடுகள் சந்தித்தன. இருப்பினும், தகவல் தொழில்நுட்பம், உலோகம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைப் பங்குகளில் ஏற்பட்ட வாங்கும் ஆர்வமானது நிஃப்டி-யை 24,200-க்கு மேல் சென்று நிலைபெற வைத்தது.

வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 171.72 புள்ளிகள் சரிந்து 77,369.11 புள்ளிகளாகவும், நிஃப்டி 32.95 புள்ளிகள் சரிந்து 24,219.05 புள்ளிகளாக நிலைபெற்றது.

Advertisement

Advertisement

நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.13 சதவீதம் உயர்ந்த நிலையில், ஸ்மால்கேப் குறியீடும் 0.26 சதவீதம் சரிந்தன. அதே வேளையில் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி குறியீடு சரிவுக்கு எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் பங்குகள் முக்கியக் காரணமாக அமைந்தன.

அதானி போர்ட்ஸ் & சிறப்புப் பொருளாதார மண்டலம் -1.64 சதவீதமும், பஜாஜ் ஃபைனான்ஸ் -1.64 சதவீதமும், பஜாஜ் ஃபின்சர்வ் -1.52 சதவீதம் மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் -1.21சதவீதம் வரை சரிந்தன. மறுபுறம் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் 2.57சதவீதமும், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் 2.37 சதவீதமும், டாடா ஸ்டீல் 1.80 சதவீதமும், எச்சிஎல் டெக்னாலஜிஸ் 1.50 சதவீதம் மற்றும் டாக்டர் ரெட்டி லேபரேட்டரீஸ் 1.30 சதவீதம் உயர்ந்தன.

சென்செக்ஸில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, பாரத் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் மறுபுறம் உலோகம், ரியல் எஸ்டேட், குறிப்பிட்ட சில எஃப்எம்சிஜி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் எண்ணெய் & எரிவாயு துறைப் பங்குகள் உயர்ந்தன.

நிஃப்டி-யில் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், அதானி போர்ட்ஸ் ஆகிய பங்குகள் சரிந்தும் மறுபுறம் ஹிண்டால்கோ, ஜேஎஸ் டபிள்யூ ஸ்டீல், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், டாடா ஸ்டீல் மற்றும் எச்.சி.எல் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.

தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, உலோகம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளைத் தவிர, மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவுடன் நிறைவடைந்தன. பொதுத்துறை வங்கி 1 சதவீதம் சரிந்தன. மேலும் தனியார் வங்கி, ஊடகம், நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட பங்குகள் 0.3 முதல் 0.5% வரை சரிந்தன.

நிஃப்டி-யில் 1,820 பங்குகள் சரிவுடன் முடிவடைந்த நிலையில் 1,740 பங்குகள் உயர்வுடன் நிறைவடைந்ததால், ஒட்டுமொத்த சந்தையின் போக்கு எதிர்மறையாக அமைந்தது.

எச்.எஃப்.சி.எல், ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ், வெல்ஸ்பன் லிவிங், லீலா பேலஸ், வெல்ஸ்பன் கார்ப், நிப்பான் லைஃப் இந்தியா அசெட் மேனேஜ்மென்ட், பி.டி.சி இண்டஸ்ட்ரீஸ், ஆர்.பி.எல் வங்கி, லென்ஸ்கார்ட் சொல்யூஷன்ஸ், நெட்வெப் டெக்னாலஜிஸ், ஏ.யு ஸ்மால் ஃபைனான்ஸ், யுனைடெட் ஸ்பிரிட்ஸ், எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் உள்ளிட்ட 180-க்கும் மேற்பட்ட பங்குகள் நிஃப்டி-யில் 52 வார உச்சத்தை எட்டியது.

summary

Indian benchmark indices started on a negative note, finishing lower in a volatile session on August 24.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments