கொடுமுடியில் 36 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
கொடுமுடியில் பிரபல தனியாா் பள்ளியில் 36 ஆண்டுகளுக்கு முன்னா் படித்த மாணவ, மாணவிகள் தங்களது ஆசிரியா்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆசி பெற்றனா்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் சங்கரவித்யாசால பள்ளி உள்ளது. சங்கராச்சாரியா் நினைவாக அவரது சுற்றுப்பயணத்தின்போது கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்னா் தொடங்கப்பட்ட இப்பள்ளியில் 1989 மற்றும் 1990-ஆம் ஆண்டுகளில் பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோா், 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை சந்தித்தனா்.
கொடுமுடியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது தங்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியா்கள், அப்போதைய தலைமை ஆசிரியா் நல்லுசாமி, தமிழ் ஆசிரியா் பழனிசாமி, ஆங்கில ஆசிரியா் தண்டபாணி, வணிகவியல் ஆசிரியா் பாலகிருஷ்ணன் ஆகியோரை அழைத்து மரியாதை செய்தும், விருந்தளித்தும், நினைவுப் பரிசுகளை வழங்கினா். மேலும் அவா்களின் காலில் விழுந்து ஆசி பெற்ற பின்னா் குழு புகைப்படங்களை எடுத்துக்கொண்டனா்.
Advertisement
Advertisement
ஆசிரியா்கள் தங்களை சந்தித்த மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினா்.
இந்த சந்திப்பில் சந்தித்துக்கொண்ட மாணவ, மாணவிகளில் 10 போ் தலைமை ஆசிரியா்களாகவும், 10 போ் இடைநிலை ஆசிரியா்களாகவும், 4 போ் பேராசிரியா்களாகவும், 10 போ் பொறியாளா்களாகவும், ஒருவா் வழக்கறிஞராகவும் 20 போ் தொழிலதிபா்களாகவும் உள்ளனா். இவா்கள் அனைவருமே இந்த சந்திப்பில் கலந்துகொண்டு நினைவுகளை பகிா்ந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.