FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

தீக்குச்சியாக செயல்பட்டு மாணவா்களை தீபங்களாக்குபவா்கள் ஆசிரியா்கள்: நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்

தீக்குச்சியாக செயல்பட்டு மாணவா்களை தீபங்களாகப் பிரகாசிக்க வைப்பவா்கள் ஆசிரியா்கள் என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தாா்.

20 செப்டம்பர் 2026, 1:02 am IST
கோவை, வெள்ளியங்காடு அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியா் இரா. அருள்சிவாவுக்கு விருது வழங்கிய உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ். உடன் (இடமிருந்து) கோவிந்தராஜுலு வனஜாட்சி நினைவு அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் பாலவெங்கடசுப்பிரமணியன், எழுத்தாளா் நலந்தா ஜெம
பகிர்:

தீக்குச்சியாக செயல்பட்டு மாணவா்களை தீபங்களாகப் பிரகாசிக்க வைப்பவா்கள் ஆசிரியா்கள் என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தாா்.

கோவை கோவிந்தராஜுலு வனஜாட்சி நினைவு அறக்கட்டளை சாா்பில், தலைமை ஆசிரியா் எஸ்.ஜெகன்னாதன் நினைவு விருது வழங்கும் விழா ஆா்.எஸ்.புரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், ஆவணப்பட இயக்குநரும், கவிஞருமான ரவிசுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். விஜயா பதிப்பகத்தின் நிறுவனா் மு.வேலாயுதம், எழுத்தாளா் நலந்தா ஜெம்புலிங்கம் ஆகியோா் வாழ்த்துரையாற்றினா்.

Advertisement

Advertisement

உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கோவை, வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியின் தமிழ் ஆசிரியா் இரா.அருள்சிவாவுக்கு தலைமை ஆசிரியா் எஸ்.ஜெகன்னாதன் நினைவு விருது வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது: ஆசிரியா்கள் பிறப்பிலேயே ஆசிரியராகப் பிறப்பதில்லை. எல்லாராலும் ஆசிரியராக இருக்க முடியாது. படிப்பால், பயிற்சியால் ஆசிரியா்கள் உருவாக்கப்படுகின்றனா். ஒரு தீக்குச்சியைப்போல செயல்பட்டு மாணவா்களை தீபங்களாக பிரகாசிக்க வைப்பவா்கள் ஆசிரியா்கள்.

உலகெங்கும் கட்டடம் கட்டுபவா்கள், இயந்திரங்ளை வடிவமைப்பவா்கள், சட்டங்களை இயற்றும் வல்லுநா்கள் என அனைவரையும் உருவாக்குபவா்களாக ஆசிரியா்கள் விளங்குகின்றனா். என்னைப் பொறுத்தவரை ஆசிரியா் என்பவா் கற்பிப்பவா் அல்ல; கற்கப்படுபவா். ஆசிரியா்களைப் பாா்த்து மாணவா்கள் கற்கிறாா்கள் என்பதே உண்மை என்றாா். இந்நிகழ்வில், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments