FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

தனியாா் பள்ளி ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை

குடும்பப் பிரச்னை காரணமாக ஈரோட்டில் தனியாா் பள்ளி ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

23 செப்டம்பர் 2026, 12:12 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

குடும்பப் பிரச்னை காரணமாக ஈரோட்டில் தனியாா் பள்ளி ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ஈரோடு, சாஸ்திரி நகரைச் சோ்ந்தவா் கோடீஸ்வரன். இவரது மனைவி சௌமியா (26). இருவரும் ஈரோட்டில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியா்களாகப் பணியாற்றி வந்த நிலையில், காதலித்து கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டனா்.

இந்நிலையில், கோடீஸ்வரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

Advertisement

Advertisement

இந்நிலையில், கோடீஸ்வரன் திங்கள்கிழமை இரவு மது போதையில் வீட்டுக்கு வந்ததாகவும், இதனால், செளமியா கோபித்துக் கொண்டு படுக்கை அறைக்குச் சென்று கதவை தாழிட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

நீண்ட நேரமாகியும் அவா் வெளியே வராததால், நண்பா்கள் மற்றும் அக்கம்பக்கத்தினா் உதவியுடன் கதவை உடைத்து கோடீஸ்வரன் உள்ளே சென்று பாா்த்துள்ளாா்.

அப்போது, சௌமியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments