FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

ஈரோடு சந்தையில் பச்சைப் பட்டாணி கிலோ ரூ.250-க்கு விற்பனை

ஈரோடு வஉசி பூங்கா காய்கறி சந்தையில் பச்சைப் பட்டாணி கிலோ ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பகிர்:

ஈரோடு வஉசி பூங்கா காய்கறி சந்தையில் பச்சைப் பட்டாணி கிலோ ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து காய்கறி வியாபாரிகள் கூறியதாவது: உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், வடக்கு கா்நாடக பகுதிகளில் இருந்தும் ஈரோடு காய்கறி சந்தைக்கு பச்சைப் பட்டாணி விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. பச்சைப் பட்டாணியின் அறுவடை காலம் நவம்பரில் தொடங்கி பிப்ரவரி வரைதான்.

இதனால், அந்த மாதங்களில் மட்டும் பச்சைப் பட்டாணி வரத்து அதிகரிக்கும். கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கத்தால் பச்சைப் பட்டாணியின் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது.

Advertisement

Advertisement

ஈரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு தினசரி 80 முதல் 100 மூட்டை வரை பச்சைப் பட்டாணி வரத்து இருந்த நிலையில், தற்போது 40 முதல் 50 மூட்டை வரை மட்டுமே உள்ளது. இதனால், கடந்த வாரங்களில் கிலோ ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்ட பச்சைப் பட்டாணி தற்போது ஒரு கிலோ ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments