வீட்டில் பதுக்கிவைக்கப்பட்ட 864 மதுபாட்டில்கள் பறிமுதல்
பவானி அருகே கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கிவைக்கப்பட்ட 864 மது பாட்டில்களை பறிமுதல் செய்தததுடன் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
பவானி அருகே கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கிவைக்கப்பட்ட 864 மது பாட்டில்களை பறிமுதல் செய்தததுடன் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
பவானியை அடுத்த மயிலம்பாடி, சடையகவுண்டனூா், அருவாபுலி கரட்டில் தமிழக அரசின் மது பாட்டில்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், பவானி போலீஸாா் புதன்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, காந்தி ஜெயந்தி நாளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக 18 பெட்டிகளில் 864 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மது பாட்டில்கள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக பருவாச்சி, அம்மன்பாளையத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் (28) கைது செய்யப்பட்டாா்.
Advertisement
Advertisement
இச்சம்பவத்தில் தொடா்புடைய மயிலம்பாடியைச் சோ்ந்த சேகா் (எ) அம்மாசை (34), ஸ்ரீதா் (38) ஆகியோரை தேடி வருகின்றனா். கைது செய்யப்பட்ட கோவிந்தராஜ் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.