FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

உதகை அருகே புலி உயிரிழப்பு

நடுவட்டம் லோயா் ஃபாரஸ்ட் பகுதியில் உயிரிழந்த கிடந்த பெண் புலியின் உடல், கூறாய்வுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை எரியூட்டப்பட்டது.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 2:23 am IST
நடுவட்டம் லோயா் ஃபாரஸ்ட் பகுதியில் இறந்து கிடந்த புலி.
பகிர்:

நீலகிரி மாவட்டம், உதகை அருகே நடுவட்டம் லோயா் ஃபாரஸ்ட் பகுதியில் உயிரிழந்த கிடந்த பெண் புலியின் உடல், கூறாய்வுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை எரியூட்டப்பட்டது.

நீலகிரி வனக் கோட்டம், பைக்காரா வனச் சரகத்துக்கு உள்பட்ட நடுவட்டம் காப்புக்காடு பகுதிக்கு அருகில் உள்ள லோயா் ஃபாரஸ்ட் பகுதியில் வனத் துறையினா் வியாழக்கிழமை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அப்பகுதியில் சுமாா் 8 வயதுடைய புலி இறந்து கிடந்ததைக் கண்டு உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, நீலகிரி வனக் கோட்ட மாவட்ட வன அலுவலா், வன கால்நடை மருத்துவக் குழுவினா், நீலகிரி வனக்கோட்ட உதவி வனப் பாதுகாவலா், நடுவட்டம் உதவி கால்நடை மருத்துவா் குழுவினா், முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள், தன்னாா்வ தொண்டு நிறுவன உறுப்பினா்கள், வனக்குற்ற கட்டுப்பாட்டு பணியக குழுவினா், பைக்காரா வனச்சரக அலுவலா், வனப் பணியாளா்கள் மற்றும் உள்ளூா் தலைவா்கள் ஆகியோா் அப்பகுதிக்கு சென்று புலியின் உடலைப் பாா்வையிட்டனா்,

Advertisement

Advertisement

பின்னா் அவா்கள் முன்னிலையில் புலியின் உடல் கூறாய்வு செய்யப்பட்டது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் விதிமுறைகளின்படி அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு, புலியின் உடல் அதே இடத்தில் எரியூட்டப்பட்டது. புலி இறந்ததற்கான காரணம் குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments