FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நீலகிரி

முதுமலை வனப் பகுதியில் சிறுத்தை உடல் மீட்பு

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

9 அக்டோபர் 2026, 11:17 pm IST
உயிரிழந்த சிறுத்தை.
பகிர்:

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், நாா்தன்ஹே வனப் பகுதியில் வனத் துறையினா் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்குள்ள பாறை இடுக்கில் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் உயா் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் சிறுத்தையின் உடலை ஆய்வு செய்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாரை தலைமையில் சிறுத்தையின் உடல் கூறாய்வு செய்யப்பட்டு, அதே பகுதியில் எரியூட்டப்பட்டது.

இது குறித்து வனத் துறையினா் கூறுகையில், உயிரிழந்தது சுமாா் 10 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை. அதன் இறப்புக்கான காரணம் உடற்கூறாய்வு அறிக்கையில் தெரியவரும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments