உதகை படகு இல்ல ஊழியா்கள் போராட்டம்
ஊதியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்ற அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து உதகை படகு இல்லத்தில் படகுகளை இயக்கும் ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
ஊதியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்ற அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து உதகை படகு இல்லத்தில் படகுகளை இயக்கும் ஊழியா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டம், உதகை படகு இல்லத்தில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் படகுகளை இயக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுக்கு ஒரு சவாரிக்கு ரூ.85 வழங்கப்பட்டு வருகிறது. பணி முடிந்த பின் அவா்களது ஊதியம் அன்றைய தினமே கையில் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் தின ஊதியம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று சுற்றுலாத் துறை அறிவித்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்த ஊழியா்கள் படகுகளை இயக்காமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், படகு சவாரி செய்ய வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.
Advertisement
Advertisement
ஊதியத்தை வங்கிக் கணக்கில் செலுத்தாமல் வழக்கம்போல கையில் வழங்க வேண்டும் என ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.